மதுரை:காமராஜபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் குமரையா (46). இவர் பழைய குயவர்பாளையம் சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் முனீஸ்வரன் (19) அதே உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் வாசுதேவன், வசந்தகுமார், சதீஷ்குமார், செல்வகுமார் ஆகிய நான்கு பேர் உணவகத்தில் உணவு உண்பது போல் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதனைக் கண்ட முனீஸ்வரனும், குமரையாவும் உணவகத்தில் மது அருந்தக்கூடாது என தடுத்துள்ளனர்.