தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமகன்களுக்கு சாக்கடையும் சந்தன மெத்தைதான்: வைரலாகும் வீடியோ! - drainage

மதுரை: மதுபோதையின் உச்சத்தில் சாக்கடையில் சொகுசாக படுத்திருக்கும் குடிமகனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

drainage

By

Published : Aug 6, 2019, 12:59 PM IST

Updated : Aug 6, 2019, 1:24 PM IST

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பலரும் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சமூகத்தில் மரியாதை இழந்து நிற்கும் அவலங்களோடு, விரும்பத்தகாத செயல்களும் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றன.

இதிலும் குறிப்பாக மதுபோதைக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உச்சகட்ட அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள அரசு மதுபானக் கடை ஒன்றில், 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு உச்சகட்ட போதையில் அப்பகுதியில் செல்லும் சாக்கடையில் படுத்துறங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

குடிமகன்களுக்கு சாக்கடையும்கூட சந்தன மெத்தைதான்

போதையில் தடுமாறி உள்ளே விழுந்த இளைஞர், தான் எங்கே இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் சாக்கடை நீரில் மிதந்தபடி தூங்குகிறார். இதனை அப்பகுதி பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். அதன் பின்னர், இளைஞர்கள் சிலர் அந்த போதை ஆசாமியை தூக்கி தெளிய வைத்து அனுப்பியிருக்கின்றனர்.

Last Updated : Aug 6, 2019, 1:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details