தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வதி யானைக்கு கண்ணில் பிரச்சினை: தீவிர மருத்துவம் அளிக்க முடிவு - Parvati elephant

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு இடது கண்ணில் ஏற்பட்ட வெண்புரை கோளாறு வலது கண்ணிலும் ஏற்பட்டுள்ளதா என மருத்துவக் குழுவினர் இன்று (அக். 1) ஆய்வுசெய்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு
தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு

By

Published : Oct 1, 2021, 8:57 PM IST

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் பராமரிக்கப்பட்டுவரும் பார்வதி என்கின்ற பெண் யானைக்கு இடது கண்ணில் கடந்த சில ஆண்டுகளாக வெண்புரை காரணமாக பார்வைக்கோளாறு ஏற்பட்டுவந்தது.

அண்மையில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு யானையைப் பார்வையிட்டு பார்வைக்கோளாறு சரிசெய்வதற்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கோயில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தியிருந்தார்.

பார்வதி யானைக்கு கண்ணில் பிரச்சினை

இதனைத் தொடர்ந்து யானைக்கு வாரந்தோறும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிறப்பு மருத்துவக் குழுவினர் யானையின் இரண்டு கண்களிலும் சிறப்பு கண் சிகிச்சை உபகரணங்களைப் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் யானை பார்வதியின் இடது கண்ணில் ஏற்பட்ட வெண்புரையானது, வலது கண்ணுக்கும் பரவத் தொடங்கியுள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து யானைக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி காலை, மாலை என இரு வேளைகளும் சொட்டு மருந்து அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்துவருவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.39.40 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details