மதுரை:வணிகத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வணிகவரி, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 18) ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் வணிகர் சங்கப் பிரதிநிதிகள், வணிகர்களுடன், வணிகவரித் துறை முதன்மைச் செயலர் சித்திக், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
போலி உரிமம் பெற்ற நிறுவனங்கள்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, "11 ஆண்டுகளுக்குப் பின்னர் வணிக பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளோம். போலியாக வணிக உரிமம் பெற்று இயங்கும் நிறுவனங்களை வணிகர்கள் யாரும் ஆதரிக்கக்கூடாது.