திமுக மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி நேற்று (ஜூன் 22) பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் வீட்டிற்குச் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தனது காலில் இருக்கும் காலணியைக் கழற்றுவது, தாக்க முற்படுவது போன்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி ஊழல் செய்ததாகக் குற்றஞ்சாட்டி பொதுவெளியில் சங்கரபாண்டியன் பேசியதாலேயே இச்சம்பவம் நடபெற்றதாகக் கூறப்படுகிறது.
பாஜக நிர்வாகியை அடிக்க சென்ற திமுகவினர் யார் இந்த சங்கரபாண்டி?
- மதுரை பாஜக நிர்வாகியாகவும் மருத்துவராகவும் பணியாற்றிவருபவர் சங்கரபாண்டியன். இவர் மதுரை மாவட்டம் உமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்.
- அண்மையில் தனது பகுதியில் இருந்த கண்மாய் ஒன்று காணாமல் போய்விட்டதாக மதுரை நகர் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டி கவனத்தை ஈர்த்தவர்.
- முரசொலி அலுவலகத்தின் 'மூலப்பத்திரம் எங்கே?'எனக்கேட்டு கையில் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளார். அதுமட்டுமன்றி மதுரை வந்த திமுக தலைவர் ஸ்டாலினின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்.
இதையும் படிங்க:'கரோனா போரில் வெற்றியடைந்தே ஆக வேண்டும்' - அமைச்சர் பாண்டியராஜன்!