மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களின் முன்னிலையில் பதவியேற்கும் விழா இன்று நடைபெற்றது.
மொத்தம் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்ற நிலையில், அதிமுக கூட்டணியில் ஒன்பது பேரும், திமுக சார்பில் ஆறு பேரும், சுயேச்சையாக கோவிலாங்குளம் ஒன்றியக் கவுன்சிலராக (8ஆவது வார்டு) அரவிந்த் என்பவரும் பதவியேற்றனர்.
சுயேச்சை வேட்பாளரை கடத்திய திமுகவினர் இந்நிலையில் அரவிந்தை திமுகவினர் கடத்தப்போவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்த அரவிந்த் காம்பவுண்ட் சுவர் ஏறி தப்பமுயன்றார். ஆனால் தப்பியோடிய அரவிந்தை மடக்கிப் பிடித்து திமுகவினர் காரில் கடத்திச்சென்றனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் குடும்பத்துக்கு அரிவாள் வெட்டு!