தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடவர் ஹாக்கி: கோப்பையைத் தட்டிச் சென்ற வாடிப்பட்டி அணி! - Every great

மதுரை: மாவட்ட அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டியில் திண்டுக்கல் அணியை தோற்கடித்து வாடிப்பட்டி அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

very great beats Dindigul Pushparaga

By

Published : May 13, 2019, 7:41 AM IST

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆடவர்களுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து இந்தாண்டுக்கான ஹாக்கி போட்டி, மே.11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இதில், மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

ஆடவர் ஹாக்கி: கோப்பையைத் தட்டிச் சென்ற வாடிப்பட்டி அணி

இறுதிச் சுற்றில், திண்டுக்கல் 'புஷ்பக ரம் அணி', வாடிப்பட்டி 'எவர் கிரேட்' அணிகள் மோதிக் கொண்டன. இதில், வாடிப்பட்டி அணி, திண்டுக்கல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த அணிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

இரண்டாவது இடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் மோகன் குமார் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details