மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மதுரை வடக்குமாசி வீதியின் இருபுறங்களிலும் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் பழக்கடையின் முன்னே, ஸ்மார்ட் சிட்டி பணி நடந்துகொண்டிருந்த போது நூற்றாண்டு பழமையான புராதன கல்வெட்டு ஒன்று தென்பட்டுள்ளது.
இதை கண்ட துப்புரவு பணியாளர்கள், தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தொல்லியல் துறையினர், கல்வெட்டை பார்வையிட்டு, ஆய்வுக்காக கொண்டுச் சென்றனர். மேலும் இந்த கல்வெட்டு கிடைத்த இடமானது, 51 ஆண்டுகளுக்கு முன் கன்னி தேவி கோயில் இருந்ததாகவும், பின்னர் அந்த கோயிலின் உரிமையாளர் அதை விற்றுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.