இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன், நடிகை பிரிகிடா ஆகியோர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரவின் நிழல் படத்திற்கு கொடுத்த அமோகமான ஆதரவுக்கு நன்றி.
தனஞ்செயன் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு படம் வெற்றியடைய வேண்டியதாகத் தெரிவித்தார். எனக்கும் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. முதலில் என்மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னை மீறி மிகப்பெரிய சக்தி உள்ளது. அந்தத் தேடல் இருந்து கொண்டே உள்ளது. அதைத் தேடுவதை மிகப்பெரிய வேலையாக வைத்துள்ளேன்.
நான் 11 வருடங்களுக்கு மேல் சபரிமலை சென்றுள்ளேன். திருப்பதிக்குச் சென்றுள்ளேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீனாட்சியை பார்க்க வருவேன். மீனாட்சியம்மனை பார்த்துவிட்டு கோயிலிலில் உட்கார்ந்து காதல் கவிதை எழுதுவேன்.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு கிறுக்குத்தனமாக கவிதை எழுதுவேன்.
இரவின் நிழல் என்னுடைய முயற்சி அனைத்தும் போட்டு எடுத்தப் படம். இரவின் நிழல் படம் வெற்றியடைந்துள்ளது. மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் படம் மாபெரும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்றால் கைவிட்டு போன ஒன்று என்ன செய்வதென்று தெரியாது.
அதற்கு நம் மனதை உள்முகமாக நகர்த்தி சின்ன பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது. விருதுகளை குவிக்க உள்ள படம் இது. இந்த படத்தின் வருமானம் திரைப்பட உலகத்தை திருப்பி போட்டு விடும். மிக மிக வித்தியாசமான படங்களுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்ற ஆச்சரியத்தை கொடுத்த படம் இரவின் நிழல்.