மதுரை:முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கந்தசஷ்டி உற்சவ திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். இந்நிலையில், இந்த வருடத்திற்கான கார்த்திகை மாத கந்தசஷ்டி திருவிழாவான, சுவாமிக்கு காப்புக்கட்டுதல், வேல்வாங்குதல், சூரசம்ஹாரம் மற்றும் பாவாடை கட்டுதல் ஆகிய திருவிழாக்கள் முறையே நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஏழு நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்று வரும்.
இந்நிலையில், கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக, காலை 5.30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பகல் 12.30 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கும் சூரசம்ஹார நிகழ்வானது 5.30 மணி வரை திருக்கோவில் வளாகத்தில் நடைபெறும் என்றும், பின்னர் 6.30 மணியளவில் சாமி சேர்த்தல் நிகழ்வு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.