மதுரை:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காந்திபுரத்தை சேர்ந்த ரத்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது ஒரே மகன் சொக்கர். கடந்த 2011ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் வருசநாடு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து முதலாவது குற்றவாளி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆயுள்தண்டனையை ரத்து செய்து குற்றவாளியான சொக்கருக்கும் இது பொருந்தும் என 2019இல் உத்தரவிட்டது. ஆனால் எனது மகனை விடுவிக்கவில்லை. பின் 2020 ஆண்டு விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தார். எனது மகனை சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்ததற்காக உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதனிடையே, இந்த வழக்கை நேற்று (ஏப்ரல்.12) விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ஆயுள் தண்டனை கைதிகளில் முன் கூட்டிய விடுதலைக்கான நபரை அடையாளம் காண வேண்டும். மத்திய, மாவட்ட சிறை கண்காணிப்பாளர்கள் முன்கூட்டிய விடுதலைக்கு தகுதியான நபர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் முறையாக வழங்க வேண்டும்.