தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் தொடங்கி ஆளுங்கட்சி பிரமுகர்கள் வரை ஊழல், முறைகேடுகளின் புகலிடமாக மாறிவருகிறது. எனவே ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளையும், கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் மோசடிகள், பணம் கையாடல் போன்றவற்றை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை.