தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜூன் 1 முதல் மதுரையிலிருந்து திருச்சி, விழுப்புரத்திற்கு ரயில்கள்!

மதுரையிலிருந்து திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தினமும் விரைவு ரயில்கள் இயக்குவதற்கான பணிகளைத் தென்னக ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் மும்முரமாகச் செய்துவருகிறது.

daily-express-trains-from-madurai
daily-express-trains-from-madurai

By

Published : May 27, 2020, 9:32 AM IST

Updated : May 29, 2020, 10:51 AM IST

உலகை உலுக்கும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

அதன்படி மதுரையிலிருந்து திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்குத் தினமும் விரைவு ரயில்களை இயக்க மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

அதனால் மதுரை கோட்டத்திற்குள்பட்ட 150 ரயில் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் 50 விழுக்காட்டினரை வைத்து சுழற்சி முறையில் முதற்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சென்னையில் கரோனா தீநுண்மி தொற்று அதிகம் பரவிவருவதால் சென்னையைத் தவிர்த்து விழுப்புரம்வரை ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வருகின்ற ஜூன் 1ஆம் தேதிமுதல் ரயில்கள் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்

Last Updated : May 29, 2020, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details