மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் தொழிற்பேட்டை 700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு 450 சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
கரோனா நோய் தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மே 17ஆம் தேதியிலிருந்து அதிகபட்சம் 100 தொழிலாளர்களுடன் தொழிற்சாலை இயங்க அரசு அனுமதித்துள்ளதால் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள 450 நிறுவனங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அதேசமயம் ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் 20 முதல் 40 சதவீதம் பேர் பணி புரிகின்றனர். இரண்டு மாத ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு தங்குவதற்கு இடம், இரண்டு மாதம் சம்பளம் வழங்கப்பட்டது.