மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அதே பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் சொந்தமாக டீ கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை டீக்கடைக்கு வந்த ஆறு இளைஞர்கள் மாரிமுத்துவிடம் இலவசமாக டீ கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாரிமுத்து மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், அவரது கடைக்குள் வைத்தே மாரிமுத்துவை கத்தி, பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இலவசமாக டீ கொடுக்க மறுத்த கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்! - கொலை
மதுரை: இலவசமாக டீ கொடுக்க மறுத்த டீ கடை உரிமையாளரை ஆறு இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் மாரிமுத்துவை மீட்டு அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாதி வழியிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.