மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் பசுமடம் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. இதற்கிடையில் பசுமடத்தில் இருந்த கங்கா என்ற பசு கால் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பசு மாடு உயிரிழப்பு - மதுரை மாவட்ட செய்திகள்
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலின் பசு மடத்தில் மாடு உயிரிழந்ததையடுத்து, கோயிலில் பரிகார பூஜை நேற்று (அக்.14) நடத்தப்பட்டது.
மதுரை
இதையடுத்து அம்மாடு வலையங்குளம் அருகே உள்ள செங்குளத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் கோயில் வளாகத்தில் பசு இறந்ததையடுத்து மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் புதன்கிழமை பரிகார பூஜை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க:மீனாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை முதல் தொடங்கும் நவராத்திரி விழா