தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

MBBS சான்றிதழை உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்க உத்தரவு! - madurai

கரோனா காலத்தில் இளநிலை மருத்துவ மாணவர்கள் 2 ஆண்டு அரசுக்கு சேவை செய்துள்ளனர் எனவும்; எனவே உயர்கல்வி படிப்பதற்காக அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

MBBS சான்றிதழை உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்க உத்தரவு: நீதிமன்றம்
MBBS சான்றிதழை உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்க உத்தரவு: நீதிமன்றம்

By

Published : Dec 27, 2022, 10:42 PM IST

மதுரை: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளில் பயின்ற பல மாணவ, மாணவிகள் உயர் மருத்துவ கல்வி பயில்வதற்கு தங்களின் எம்.பி.பி.எஸ் கல்வி சான்றிதழ்களை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதுகலைப் பட்டதாரி படிப்பிற்கு சேரும் பொழுது, அரசிற்கு 2 ஆண்டுகள் மருத்துவ சேவை பணியாற்ற வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. இதில் தவறும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் உள்ளது.

மனுதாரர்கள் மருத்துவப் படிப்பினை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளனர். மேலும் கரோனா காலகட்டத்தில் பணியாற்றியுள்ளதால், மேலும் பணியாற்ற அவசியமில்லை. தங்களது மருத்துவக்கல்வி சான்றிதழ்களை தங்களிடம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

எனவே, மருத்துவ உயர்கல்வி பயில உள்ள மருத்துவ மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: சீரடி சாய்பாபாவுக்கு வைரக்கற்கள் பதித்த கிரீடம் காணிக்கை - அதன் மதிப்பு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details