தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூ-ட்யூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து - உயர் நீதிமன்றக்கிளை!

ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் யூ-ட்யூபர் சாட்டை துரைமுருகன் அவதூறாக வீடியோ பதிவிட்டதாக அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து- கோர்ட்டு உத்தரவு..!
யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து- கோர்ட்டு உத்தரவு..!

By

Published : Jun 7, 2022, 3:56 PM IST

மதுரை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன், இனிமேல் இது போல அவதூறாகப் பேசமாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதிமொழி வழங்கியதன் அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தார்.

ஆனால், ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் அவதூறான கருத்துகளை யூ-ட்யூபில் பரப்பியதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று(ஜூன்07) நீதிபதி புகழேந்தி, ’’மனுதாரர் நீதிமன்ற உத்தரவை மீறியது உறுதியாகிறது. ஆகவே சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.

ஒப்பந்த விதிகளை மீறுகையில், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிர்வாகம் அந்த வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், அவர்களும் குற்றவாளிகளே. ஆகவே, நடவடிக்கை எடுக்கத் தவறும் சமூக வலைதளங்கள் மீதும், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். வீடியோக்களை அகற்றலாம்" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க:இளைய பாரதம் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் - பாஜகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details