மதுரை: விவசாய நிலத்தை சேதப்படுத்தியதாகப் பதியப்பட்ட பொய் வழக்கில், தட்டார்மடத்தில் உயிரிழந்த செல்வனின் சகோதரர்கள் இருவருக்கு நிபந்தனையற்ற முன்ஜாமின் வழங்கி உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்த பங்கார் ராஜன், செல்வன், பீட்டர்ராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ஆகஸ்ட் 21ஆம் தேதி மோசமான வார்த்தைகளால் பேசியதாகவும், விவசாய நிலத்தை சேதப்படுத்தியதாகவும் கூறி அதிமுக நிர்வாகி திருமணவேல் அளித்த புகாரின் அடிப்படையில் எங்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். எங்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தொடர்பாக சாத்தான்குளம் முன்சீப் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.