மதுரை:திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர் ரோகினி. இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எனக்கு அரசு தரப்பில் பணி நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் ஒப்புதல் வழங்கக்கோரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன்.
விண்ணப்பம் நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளதால், எனது பணி ஒப்புதலை வழங்க வேண்டும், ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பே ஊதியம் வழங்கப்படும் என்பதால் ஆசிரியராக பணி நியமன அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என 2019ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் பதிலளிக்க 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை எந்த ஒரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.