மதுரை: தென்காசி கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில், 'நான் தென்காசி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். மேலும் கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து நாங்கள் இருவரும் எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் கிருத்திகாவின் பெற்றோர்கள், அவரை கடத்திச் சென்று விட்டனர். எனவே, கிருத்திகாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் கிருத்திகாவை தென்காசியில் காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி அவரிடம் வாக்குமூலம் பெற்று தென்காசி காவல்துறையினர் உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தென்காசி நீதிமன்றத்தில் கிருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தென்காசி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். கிருத்திகா உறவினர்கள் தரப்பில் கிருத்திகாவை அழைத்துச் செல்வதாக மனு செய்யவும்; அதனை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்ய வேண்டும் எனவும், கிருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் உத்தரவிட்டிருந்தன.