தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் கரோனா தடுப்பூசி முகாம்! - கரோனா தடுப்பூசி முகாம்

மதுரை: தனியார் தொழிற்சங்கங்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசி முகாம்
கரோனா தடுப்பூசி முகாம்

By

Published : Apr 26, 2021, 5:40 PM IST

மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தனியார் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் தொழில் கூட்டமைப்பினர் பயன்பெறும் வகையில் மதுரை மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இதனை மாநகராட்சி ஆணையர் விசாகன் தொடங்கி வைத்தார். விழாவில், 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் தொழில் கூட்டமைப்பை சேர்ந்த தொழில் முனைவோர், தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் அதிகளவில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கரோனா தடுப்பூசி செலுத்துபவர்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்த பின்னரே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசி முகாம்

மேலும் இரண்டாம் கட்ட டோஸ் தடுப்பூசியூம் செலுத்தப்பட்டது. முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details