32ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ள மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், 45 வயதிற்கு உள்பட்ட 500 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 500 பேர் உள்பட ஆயிரம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில், போக்குவரத்து வாகன ஆய்வாளர் சி.செந்தில்குமார், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அன்பு நிதி, போக்குவரத்து துறை அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.