மதுரையில் கரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை இன்று (அக். 17) 84 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 76 பேர் சிகிச்சைக்காக இன்று ஒரேநாளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மதுரை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 752 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
மதுரையில் ஒரேநாளில் 76 பேருக்கு கரோனா: இருவர் பலி
மதுரை: கரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 76 சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்த்தொற்று
தற்போது 787 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 404 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.