தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா அச்சுறுத்தல்: பக்தர்களின்றி கார்த்திகை திருவிழா!

மதுரை:கரோனா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  கரோனா அச்சுறுத்தல்: பக்தர்களின்றி கார்த்திகை திருவிழா!
கரோனா அச்சுறுத்தல்: பக்தர்களின்றி கார்த்திகை திருவிழா!

By

Published : Nov 6, 2020, 8:49 PM IST

மதுரை அறுபடை வீடுகளின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை திருவிழாக்கள் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் பக்தர்களின்றி கோயிலுக்கு உள்ளேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கார்த்திகை மகா தீபம் மட்டும் நவம்பர் 29 ஆம் தேதியன்று மாலை 6 மணியளவில் வழக்கம்போல கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்றப்படும் எனவும், இதிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கார்த்திகை திருவிழா உற்சவம் நவம்பர் 21ஆம் தேதி காலை 7.15 மணியளவில் கோயிலுக்குள் பக்தர்களின்றி உள்திருவிழாவாக நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து நவம்பர் 28ஆம் தேதியில் பட்டாபிஷேகம், 29ஆம் தேதி மலைமேல் உள்ள உச்சிபிள்ளையார் கோயிலில் மகாதீபம் மாலை ஏற்றப்படும்போது, கோயினுள் பாலதீபம் ஏற்றப்படும்.

பின்னர் 30ஆம் தேதி தீர்த்த உற்சவ விழாவுடன் கார்த்திகை திருவிழா முடிவடைகிறது.

ABOUT THE AUTHOR

...view details