தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மதுரையில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' - அமைச்சர் மூர்த்தி - Corona spread

மதுரை: மாவட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், கரோனா பரவல் கட்டுப்படுத்தபட்டுள்ளதாகவும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

'மதுரையில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' - அமைச்சர் மூர்த்தி
'மதுரையில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' - அமைச்சர் மூர்த்தி

By

Published : Jun 2, 2021, 8:35 PM IST

மதுரையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "மதுரை மாவட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை. மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கரோனா இல்லாத நிலையை உருவாக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

'மதுரையில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' - அமைச்சர் மூர்த்தி
கிராமப்புறங்களில் அரசு மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கரோனா பரவல் வெகுவாகக் குறைந்திருக்கிறது. மேலும் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை, தொற்று அறிகுறி உள்ளவர்களை கணக்கெடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details