தமிழ்நாட்டில் இன்று (செப். 22) ஒரேநாளில் ஐந்தாயிரத்து 337 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 52 ஆயிரத்து 674ஆக அதிகரித்துள்ளது.
மதுரையில் இன்று மேலும் 61 பேருக்கு தொற்று! - மதுரையில் கரோனா
மதுரை மாவட்டத்தில் இன்று (செப். 22) ஒரேநாளில் 61 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கரோனா
இதற்கிடையில் இன்று மதுரை மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 24ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 14 ஆயிரத்து 885 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தற்போது 759 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் சிகிச்சைப் பலனின்றி 380 பேர் உயிரிழந்துள்ளனர்.