தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2021, 10:47 AM IST

ETV Bharat / state

மேலூரில் தீவிரமடையும் கரோனா தொற்று - பொதுமக்கள் அச்சம்!

மதுரை: மேலூரில் தீவிரமாக கரோனா தொற்று பரவுகின்ற காரணத்தால், அப்பகுதியில் உள்ள 5 கிராமங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலூரில் தீவிரமடையும் கரோனா தொற்று
மேலூரில் தீவிரமடையும் கரோனா தொற்று

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கரோனா பாதிப்பும் படிப்படியாகக் குறையத் தொடங்கி வருகின்றது.

இந்நிலையில் மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. அதனால் சுகாதாரத்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தெற்குத்தெரு, வெள்ளலூர், அ.வலையபட்டி, தனியாமங்கலம், கோட்டநத்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

ஆகையால் அக்குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதனையடுத்து மதுரை மாவட்ட சுகாதாரத் துறை சார்பாக அக்குறிப்பிட்ட கிராமங்களில் கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:லேட்டாகவும் லாஸ்ட்டாகவும் கோவின் தளத்தில் வந்த 'தமிழ்'

ABOUT THE AUTHOR

...view details