தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் திருவிழாவில் மோதல் - ஒருவர் பலி

மதுரை: கொடுக்கம்பட்டி கிராமத்தில் இருசமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்கள் போராட்டம்

By

Published : Jun 18, 2019, 7:51 AM IST

மதுரை மாவட்டம், கொடுக்கம்பட்டி கிராமத்தில் நேற்று நடந்த திருவிழாவில் இருசமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்பு, தங்கையா, சுபாஷ், திவாகர் ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

உறவினர்கள் போராட்டம்

ஊர் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், ராம்பு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இந்நிலையில் கலவரத்தில் தாக்கியவர்களை கைது செய்யக் கோரி இறந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கலவரத்தால் கொடுக்கம்பட்டியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அதிகளவில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details