மதுரை:குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் (Chartered accountant) படித்து வந்துள்ளார். மதுரையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிச.17, 18 ஆகிய தேதிகளில் மதுரையில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் குறித்த கருத்தரங்கு நடந்தது. இதற்காக மதுரைக்கு வந்த மாணவி, தெப்பக்குளம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.
அதே விடுதியில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த அஷீஷ் ஜெயின் (22) என்ற இளைஞரும், காஞ்சிபுரம் மாடவாக்கம் ஜெரோம் கதிரவன் (22) ஆகிய இருவரும் தங்கியிருந்துள்ளனர். இரண்டு நண்பர்களும் மாணவியோடு அறிமுகமாகி பின்னர் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர்.
இது குறித்து மாணவி குஜராத் சென்ற பின்பு ஆன்லைனில் புகார் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் இரண்டு மாணவர்களையும் மதுரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் ஜெரோம் கதிரவன், தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.