மதுரை:மதுரையின்மகபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் நித்தீஷ் தீனா (7). இவர் நவம்பர் 2ஆம் தேதி மதுரை பைக்கராவின் பிரபல ஜவுளிக் கடையில் ஜவுளி எடுக்க சென்றிருக்கிறார்.
அப்போது ஜவுளிக்கடையின் ஐந்தாவது தளத்திலிருந்து எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தான். பின்னர் சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.