மதுரை திருப்பாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயிலும், ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற மாணவி, மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி! - கல்லூரி மாணவி
மதுரை: தனியார் கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
suicide
இதில் படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசாரின், முதற்கட்ட விசாரணையில் தனது உறவினர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்காமல் மனவருத்தத்தில் மீனாட்சி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், மீனாட்சி தற்கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.