மதுரை மாவட்டம் கப்பலூர் அருகே மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை மற்றும் முதுகலைப் பிரிவுகளில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இங்க பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, அரட்டையடிப்பது, கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டுவது என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தார். இதனை தட்டிக்கேட்ட பெண் பேராசிரியர்களையும் அவதூறாகப் பேசியுள்ளார்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட பேராசிரியரின் நடத்தை குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இப்புகாரின் அடிப்படையில் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.