குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக, மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு - madurai
மதுரை: மாநாகர காவல் துறையினர் சார்பில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை மாணவ மாணவியர் கையில் ஏந்திக்கொண்டு நடைபயணமாக சென்றனர். இந்த பேரணியானது அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காந்தி மியூசியம் வரை நடைபெற்றது.
மேலும் இந்த பேரணியில் காவல் உதவி ஆணையர் சசிமோகன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம், இது போன்ற விழிப்புணர்வு பேரணிகள் தொடர்ச்சியாக மதுரை மாநகர் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.