தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளியை முன்னிட்டு சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில்! - திருநெல்வேலி

Chennai to Tirunelveli Special Train: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக டெல்டா மாவட்டங்கள் வழியே சென்னை - திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chennai to Tirunelveli Special Train
தீபாவளியை முன்னிட்டு சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 8:03 AM IST

மதுரை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, சென்னை - திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில் (06070) நவம்பர் 9, 16, 23 ஆகிய வியாழன்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) நவம்பர் 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூரிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

மேலும் இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டல் என்ன?

ABOUT THE AUTHOR

...view details