தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிகளையும், அங்கு நடைபெறும் தவறுகளைக் கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிசிடிவி கேமராக்கள்

By

Published : Jul 4, 2019, 11:04 PM IST

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து முதுநிலை கண்காணிப்பாளராக இருந்து, 2016 ஆம் ஆண்டு ராஜேந்திரன் ஓய்வு பெற்றார். அரசுப் போக்குவரத்துக் கழக மேம்பாடு, நிதி கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆகிய பொறுப்புகளில் உள்ள சுகுமார், போக்குவரத்துக் கழக நிதியைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன் ,"மனுதாரரின் புகார் மனு தொடர்பாகப் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ஆறு வாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் உயர் அலுவலர்கள், அவர்களைச் சார்ந்தவர்களின் சொத்துக்கள், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார்களாக என்பது தொடர்பாக நான்கு மாதத்தில் விசாரணை நடத்த வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிகளையும், அங்கு நடைபெறும் தவறுகளைக் கண்காணிக்கவும், பணி மேம்பாட்டுக்காகவும் அனைத்து பேருந்து நிலையங்கள், போக்குவரத்து கழக டெப்போக்கள், நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details