மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்துக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் வெங்கடேசன் கூறியதாவது, மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றால் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சியையும்மேற்கொள்வேன்.