தமிழ்நாட்டில் மதுரை திருப்பரங்குன்றம் உள்பட நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அனைத்துக் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் போட்டியிடவுள்ள இ. மகேந்திரனுக்காக வாக்கு சேகரிக்க நடிகர் செந்தில், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
அமமுக கட்சி பிரச்னையை நடுரோட்டில் உளறிய சி.ஆர்.சரஸ்வதி அப்போது பரப்புரைக்காக சி.ஆர்.சரஸ்வதியை மட்டும் ஜீப்பில் ஏற்றிவிட்டு மற்றவர்கள் தனியாக கார்களில் வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சி.ஆர். சரஸ்வதி நடுரோட்டில் வைத்து மைக்கில் உங்கள் ஈகோவிற்காக என்னை தனியாக வர வைத்து நேரத்தை வீணாக்குகிறீர்கள் என கோபமாக பேசினார்.
இது அப்பகுதியில் இருந்த வாக்காளர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.