தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்!

மதுரை: மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திரௌபதியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் பார்வைிட்டு மகிழ்ந்தனர்.

கோயில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

By

Published : Mar 23, 2019, 10:29 AM IST

மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் மாணிக்கவாசகர் பிறந்த மண்ணான திருவாதவூரில் பிரசித்திப்பெற்ற திரெளபதி அம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தினை தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகரன் தொடங்கிவைத்தார்.

இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் வருகைபுரிந்து பந்தயத்தில் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.

நடு மாடு, பெரிய மாடு, பூஞ்சிட்டு என மூன்று விதமான மாட்டு வண்டி பந்தயங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி, இன்று நடைபெற்ற நடு மாடுகளுக்கான பந்தயப் போட்டியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்குபெற்றன.

இப்போட்டியில் திருவாதவூரைச் சேர்ந்த பதினெட்டாங்குடி என்பவரது மாடுகள் முதலிடம் பிடித்ததையடுத்து 30 ஆயிரத்திற்கான பரிசை தட்டிச் சென்றது. இதனையடுத்து நாளை பெரிய மாடு, பூஞ்சிட்டு மாடுகளுக்கான மாட்டுப் பந்தயம் நடைபெற உள்ளன.

ABOUT THE AUTHOR

...view details