பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் சாதி சான்றிதழை ஆய்வு செய்யப்படுமா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு
மதுரை: பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் ராஜம் சாதி சான்றிதழை ஆய்வு செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல்வாழ்வு துறைச் செயலர், பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் ராஜம் என்பவரது சாதி சான்றிதழை ஆய்வு செய்யக் கோரி, மதுரையை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "மதுரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் முதன்மை பொது மேலாளராக ராஜம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மதுரையில் 23 வருடங்களாக வேலை செய்து வருகிறார். சிடிஏ - விதி 2006இன் படி 6 வருடத்திற்கு மேல் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. ஆனால், சட்ட விரோத செயல்கள் மூலம் 23 வருடங்களாக மதுரையிலேயே இவர் பணிபுரிந்து வருகிறார்.
ராஜம் என்பவர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து கொண்டு பழங்குடியினர் இனத்திற்கான சாதி சான்றிதழை சட்டவிரோதமாக பெற்று வேலையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.