மதுரை: மதுரை அருகே உள்ள விளாங்குடியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - முத்துமாரி தம்பதியர். இவர்களது மகன் பிரான்ஸிஸ் எபனேசர் (17). இவர் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம் வகுப்புப் படித்துவந்தார். இந்நிலையில் எபனேசர் தனது வீட்டிலுள்ள செல்போனில் அடிக்கடி ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
சம்பவத்தன்றும் (செப். 27) அவர் ஆன்லைன் விளையாட்டு விளையாட, அதனை அவரது தாயார் முத்துமாரி கண்டித்துள்ளார்.