தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் மதுரையில், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் யாசகம் பெற்றுவருகிறார். கடந்தாண்டு கரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பூல்பாண்டி மதுரையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோருக்கு நிவாரணம் வழங்கிய யாசகர் - பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோருக்கு நிவாரணம்
மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் ஒருவர் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பூல்பாண்டியன் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்ற தொகையிலிருந்து தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் கடந்த மே மாதம் முதல் கரோனா நிவாரண நிதியாக வழங்க தொடங்கி 27 முறை மாவட்ட ஆட்சியரிடம் நிவாரணமாக வழங்கிவந்தார்.
இதனைத் தொடர்ந்து யாசகர் பூல்பாண்டியன் கடந்த மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த அளவிற்கு உதவிட வேண்டி அரசின் பொதுநிவாரண நிதிக்கு, பொதுமக்களிடம் யாசகம் பெற்ற பணம் பத்தாயிரம் ரூபாயை மாவட்ட மதுரை ஆட்சியர் அன்பழகனிடம் வழங்கினார். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.