தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடைகோரிய வழக்கு: அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிபதி நம்பிக்கை - ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு

மதுரை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Madras Hight court
Madras Hight court

By

Published : Nov 3, 2020, 3:59 PM IST

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "கரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. இணையதளத்தில் பல்வேறு விதமான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் ஆகிய விளையாட்டுகள் அதிக அளவில் இணையதளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இளைஞர்கள் மூழ்கி தங்கள் பணத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பணத்தை இழக்கும் இளைஞர்கள், தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, ஆன்லைன் சூதாட்டம் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என நேற்று (நவ-2) வழக்கறிஞர் நீலமேகம் முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, இதனை மனுவாக தாக்கல் செய்த பின் நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று (நவ-3) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விளையாட்டுகளால் மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், நாக மீனா உள்ளிட்ட பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் செலுத்தும் பணம் எங்கு? யார்? கணக்கிற்கு செல்கிறது?, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய தமிழ்நாடு அரசு சட்ட வரையறை எதுவும் செய்துள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தெலங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து தமிழ்நாடு அரசு 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நம்புகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details