மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கடசாரி நல்லகுரும்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
காளைகளை ஆர்வமுடன் அடக்கிய காளையர்கள் - ஜல்லிக்கட்டு
மதுரை: அய்யனார்குளம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
File pic
இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 900க்கும் மேற்பட்ட காளைகளும் 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இப்போட்டியை உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
இதில் 30க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும், சில பார்வையாளர்களுக்கும் காளைகள் தாக்கி காயம் ஏற்பட்டது. இவ்விழாவில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈட்டுபட்டனர் .