தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: மதுரையில் மேலும் ஒரு சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு - Madurai Corona News

மதுரை : கரோனா தொற்று காரணமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் மலர் சாமி இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இன்று (செப்.9) மேலும் ஒரு சார்பு ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Madurai Corona News
Madurai Corona News

By

Published : Sep 9, 2020, 8:16 PM IST

மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சந்தான பாண்டியன். மதுரை பசுமலை பகுதியில் தனது மனைவி சாந்தா, மகன் கணேஷ்குமாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சந்தான பாண்டியன் இன்று (செப்.9) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

செக்கானூரணி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உமாசங்கர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு நுண்ணறிவு பிரிவின் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த மலர் சாமி ஆகியோர் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அண்மையில் உயிரிழந்தனர்.

கரோனா தொற்றின் காரணமாக இறந்த காவலர்களின் எண்ணிக்கை மதுரையில் மட்டும் நான்காக உயர்ந்துள்ளது. இதனால், மதுரை காவல் துறை வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details