தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராகுல் சொன்னார் பாஜக வென்றது - அண்ணாமலையின் வஞ்சப்புகழ்ச்சி!

மதுரையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியினையும், ராகுல் காந்தியையும் குறித்து விமர்சித்துப் பேசினார்.

bjp candidate introductory meet bjp candidate introductory meet at madurai annamalai criticize rahul gandhi annamalai criticize rahul gandhi in candidate introductory meet வேட்பாளர் அறிமுக கூட்டம் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மதுரையில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் வேட்பாளர் அறுமுகத்தில் அண்ணாமலை பேச்சு ராகுல்காந்தியை விமர்சித்த அண்ணாமலை
அண்ணாமலை

By

Published : Feb 10, 2022, 10:48 AM IST

மதுரை:பாஜக சார்பாக மாநகராட்சி, பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம், மதுரை பழங்காநத்தம் சந்திப்பில் பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று, வேட்பாளர்களை அறிமுகம் செய்து, மதுரைக்கான தேர்தல் அறிக்கையை மதுரை மாநகரத் தலைவர் டாக்டர் சரவணன் வழங்க, அதனை வெளியிட்டார்.

நான் வெஜ் பொங்கல்

இதையடுத்து மேடையில் பேசிய அண்ணாமலை, “எட்டு மாத கால திமுகவின் ஆட்சி, 80 ஆண்டு காலம் ஆட்சி செய்ததுபோல், மக்களுக்கு சலிப்பை கொடுத்துள்ளது. திமுக அரசு தேர்தலின் போது 518 வாக்குறுதிகள் வழங்கியது. ஆனால் அதில் ஏழு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

திமுக அரசு வெஜ், நான் வெஜ் பொங்கல் தொகுப்பு வழங்கியது. பொங்கல் தொகுப்பில் பாம்பு, பல்லி எனப் பல விஷப் பூச்சிகள் இருந்தன. பொங்கல் தொகுப்புக்கான கரும்பு விவசாயிகளிடமிருந்து 25 ரூபாய்க்கு என மொத்தமாக இரண்டு கோடியே 15 லட்சம் வாங்கி, அதனை ரேசன் கடைக்கு 40 ரூபாய்க்கு விற்பனை செய்தவர்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள்.

கரும்பில் மட்டும் திமுக அரசு 33 கோடி கமிஷன் அடித்துள்ளது. மஞ்சள் பை ஒன்று 60 ரூபாய்க்கு வாங்கி தமிழ்நாடு அரசு கின்னஸ் சாதனை செய்துள்ளது. பொங்கல் தொகுப்பின் விலையைவிட மஞ்சள் பை விலைதான் அதிகம்.

திமுக, காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அண்ணாமலை

மானத்த வாங்காதீங்க ஸ்டாலின்

73 விழுக்காட்டினருக்கு கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி செய்ய முடியாது என அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி 12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். எந்த முதலமைச்சரும் பதில் கடிதம் எழுதவில்லை. உங்கள் மானம் போகிறது. அனைவரது மானத்தையும் ஏன் சேர்த்து வாங்குகிறீகள்.

இந்தியா முழுவதும் உள்ள 37 தலைவர்களுக்கு சமூக நீதி கூட்டமைப்பு தொடர்பாக கடிதம் எழுதினார். துணைப் பிரதமராக மாற வேண்டும் என ஸ்டாலின் ஆசைப்படுகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தற்போது 50 மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 22 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். கரோனாவில் 30 கோடி பேர் இறப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கூறிவிட்டி நைசாக இத்தாலி சென்றார்.

நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ், திமுகதான். அதனை நடைமுறைப்படுத்தியதுதான் பாஜக. இந்தியைத் திணித்தால் பாஜக எதிர்ப்போம் எனக் கூறுகின்றனர். ஆனால் இந்தியைத் திணித்த காங்கிரஸ்தான் நாள்தோறும் காலை முதல் இரவு வரை மோடியைப் பற்றியும் பாஜக பற்றியும் பொய் பேசிவருகிறது. நீங்கள் முழித்துக் கொண்டுவிட்டீர்கள், அதனால்தான் திமுகவிற்கு ஆட்சி பயம் வந்துவிட்டது.

‘ராகுல் காந்தி சொன்னாலே போதும்’

பாஜக மதவாத கட்சி. இந்துக்களுக்கான கட்சியினர் கூறிவருகின்றனர். ஆனால் பாஜக சார்பாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், திருநங்கைகள் வேட்பாளராகக் களமிறங்கி உள்ளனர். எங்களுக்கு மதம், பாலின பாகுபாடு கிடையாது. எங்களுக்கு முருகனும் வேண்டும், அல்லாவும் வேண்டும், இயேசுவும் வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்வது நாங்கள் இல்லை.

தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வராது என ராகுல் சொன்னார். அதை கேட்டவுடன் நான் லட்டு வாங்கிவர கட்சியினரிடம் சொன்னேன். ஏனென்றால், குஜராத்தில் மோடி முதலமைச்சராக முடியாது என ராகுல் கூறியபோது, மோடி முதலமைச்சரானார், பிரதமர் ஆக மாட்டார் என்று கூறிய பொழுது பிரதமரானார்.

ராகுல் காந்தி சொன்னாலே, எங்களுக்கு சுக்கிரன் திசை அதிகமாகும். அவர் சொன்ன மறுநாளே ராமநாதபுரம் கமுதியில் 14 வார்டில் போட்டியின்றி பாஜக தேர்வானது. அதற்கு மறுநாள் நாகர்கோவிலில் இரண்டு வார்டுகள் என பாஜக போட்டியின்றி வென்றனர்” என்று பேசினார்.

இதையும் படிங்க: ஓட்டு கேட்க வேண்டிய அவசியமே இல்லை - உறையூரில் உதயநிதி பேச்சு

ABOUT THE AUTHOR

...view details