மதுரை: தாய்லாந்து நாட்டில் கடந்த ஜூன் 6ஆம் தேதி முதல் ஆசிய நாடுகளுக்கிடையில் 18 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் வாலிபால் போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில் ஜூன் 13ஆம் தேதியுடன் இந்தப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், போட்டியில் பங்கேற்ற 11 நாடுகளில் இந்தியா 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய அணி சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாதிகா தாய்லாந்தில் நடைபெற்ற அனைத்துப்போட்டிகளிலும் பங்கேற்றார். இதனையடுத்து தாய்லாந்திருந்து இன்று(ஜூன் 14) பிற்பகல் திரும்பிய சுவாதிகாவுக்கு மதுரை விமானநிலையத்தில் மதுரை மாவட்ட கையுந்துப்பந்து சங்கத்தின் இணை செயலாளர் தீபன், துணைத் தலைவர்கள் தீபக் மற்றும் சேந்தன், பொருளாளர் சங்கர் நாராயணன், ஒய்எம்சிசி வாலிபால் கிளப்பைச் சேர்ந்த அகஸ்டின் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர்.
தேனி மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வரும் சுவாதிகா ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், '18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய வாலிபால் அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டு, ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் கடந்த ஒன்றரை மாதங்களாக பயிற்சி மேற்கொண்டேன். பிறகு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றேன்.