தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணி நீக்கம்: தனியார் பைனான்ஸ் நிறுவன உரிமையாளரை தாக்கிய ஊழியர் - உரிமையாளரை தாக்கிய ஊழியர்

மதுரை: பணியிலிருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் தனியார் பைனான்ஸ் நிறுவன உரிமையாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

employee
employee

By

Published : Jul 24, 2021, 8:02 PM IST

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தை சோழவந்தானை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் இருசக்கர வாகன கடன் வழங்கும் பிரிவில் சூர்யா, விமல் என்ற இளைஞர்கள் பணியாற்றினர். இவ்விருவரும் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் முறைகேடான வகையில் வாகன கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சி

இந்த குற்றச்சாட்டையடுத்து ஜெயக்குமார் அவர்களை பணி நீக்கம் செய்தார். இதனால் கோபமடைந்த சூர்யா, விமல் ஆகியோர் நிதி நிறுவன அலுவலகத்திற்குச் சென்று உரிமையாளரை சரமரியாக தாக்கினர்.

இந்த சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் சோழவந்தான் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சித்த மருத்துவமனையில் கொள்ளை: சிசிடிவி கேமராவையும் அபேஸ் செய்த திருடர்கள்

ABOUT THE AUTHOR

...view details