மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் மகேந்திரன், ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஏனென்றால் திருப்பரங்குன்றம் தொகுதி எப்போதுமே டிடிவி தினகரனின் கோட்டையாகத் திகழ்கிறது" என்றார்.
திருப்பரங்குன்றம் டிடிவி தினகரனின் கோட்டை: அமமுக வேட்பாளர் சிறப்பு பேட்டி! - மகேந்திரன்
மதுரை: திருப்பரங்குன்றம் டிடிவி தினகரனின் கோட்டை என அத்தொகுதி அமமுக வேட்பாளர் மகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து அமமுக பிரிந்து வந்ததால் அவர்களின் வாக்குகள் பிரிந்துவிடும் நாங்கள் எளிதாக தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று டாக்டர்.சரவணன் கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அதுஅவருடைய அரசியல் கணக்காக இருக்கலாம், ஆனால் நாங்கள் பிரிந்து வந்தது என்பது உண்மைதான் இருந்தாலும் டிடிவி தினகரனின் கொள்கையில் மக்கள், இளைஞர்கள், உள்ளிட்டோர் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களின் ஆதரவு எங்களுக்குத்தான் இருக்கிறது என்பது ஆர்.கே நகர் தேர்தலிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது என பதிலளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ”இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் என்ற வகையில் சென்னை, மதுரையில் இருக்கின்ற தனியார் நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு வருடத்திற்கு ஒருமுறை சிறப்பு முகாம்கள் அமைத்து அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு முனைப்போடு செயல்படுவேன். திருப்பரங்குன்றம் தேர்தலில் 63 பேராக இருந்தாலும் 630 பேராக இருந்தாலும் அமமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.