தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அதிமுக - திருமா குற்றச்சாட்டு - neet exam latest news

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்

By

Published : Sep 15, 2021, 6:18 AM IST

மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னோடி நிர்வாகி மலைச்சாமியின் நினைவு நாளுக்கு மரியாதை செலுத்த விசிக தலைவர் தொல். திருமாவளவன் மதுரை வந்தடைந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீட் விலக்கு மசோதா இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய துணிச்சலான முடிவு. நீட் தேர்வு மாணவச் செல்வங்களை காவு வாங்குகிறது. அதனால், நீட் தேர்வு விலக்கு மசோதாவை கொண்டு வந்த முதலமைச்சருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மன அழுத்தத்திற்கு ஆளான மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த ஆண்டு நீட்தேர்வு, இரண்டு இளம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. மாணவ செல்வங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடாது என வேண்டுகோள் விடுக்கிறேன்.

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம்

வருகின்ற செப்டம்பர் 15ஆம் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டவர்களின் விடுதலை, உபா போன்ற பயங்கரவாதத் தடை சட்டத்தை திரும்பப்பெறுதல் ஆகியவற்றை வலியறுத்தி தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்தவுள்ளது. காரைக்குடியில் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ளவுள்ளேன்.

அதிமுக இரட்டை வேடம்

அண்ணாமலையைப் பொருத்தவரை திமுகவிற்கு எதிராக பேசுவதாக நினைத்து தமிழ்நாடு மக்களுக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறார். ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாய்ப்புள்ள இடங்களில் விசிக சார்பாக போட்டியிடுவோம். நீட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக நடிக்கிறது. இது அவர்களுடைய இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது" என்றார்.

இதையும் படிங்க:இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு - கொதிக்கும் கமல்

ABOUT THE AUTHOR

...view details